You are here: Home // செய்திகள் // சிறுமிகளை ஆபாச படம் பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம்

சிறுமிகளை ஆபாச படம் பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம்

சிறுமிகளை ஆபாச படம் பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது முதியவருக்கு 3 ஆயுள் தண்டனைகளை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
small girl
சென்னை வண்ணார்பேட்டை பென்சில் பேக்டரி பகுதியை சேர்ந்தவர் ஆ.சோமசுந்தரம் (வயது 77). இவர் டெய்லர் கடை நடத்தி வந்தார். அந்தப் பகுதியை சேர்ந்த 3 சிறுமிகளின் மீது சோமசுந்தரத்துக்கு காமப் பார்வை இருந்து வந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறுமியையும் அவர் தனித்தனியாக தனது காமப்பசிக்கு விருந்தாக்கி உள்ளார்.

சிறுமியை டீ வாங்கி வரச்சொல்வார். டீ வாங்கி வந்ததும், வீட்டுக்குள் உட்கார வைத்து ஆபாசப்படத்தை வீடியோவில் போட்டுக் காட்டுவார். இதற்கு மறுக்கும் சிறுமியின் கை, கால்களை கட்டி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், உன் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதோடு, சிறுமியின் கையில் ரூ.10 கொடுத்து அனுப்பியுள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தன் பெற்றோரிடம் விபரம் கூறி அழுதுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் சோமசுந்தரத்தை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், மற்ற 2 குழந்தைகளையும் அவர் கற்பழித்த விவரம் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து சோமசுந்தரம் மீது 3 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுமிகள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜராகி, சோமசுந்தரம் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாட்சி அளித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனா சதீஷ் தீர்ப்பளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சோமசுந்தரம், தங்கள் கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமிகள் தெளிவாக சாட்சியம் அளித்துள்ளனர். இந்த வழக்கில் அரசு சாட்சிகளின் சாட்சியம், மருத்துவ அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்கள் அனைத்தும் சோமசுந்தரம் குற்றவாளி என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளன.

எனவே சோமசுந்தரம் குற்றவாளி என்று தீர்மானிக்கிறேன். இந்திய தண்டனை சட்டம் 366(ஏ) (தகாத உறவு கொள்ளும் நோக்கத்தில் சிறுமியை மற்றொரு இடத்துக்கு இழுத்துச்செல்லுதல்) குற்றத்துக்காக தலா 10 ஆண்டு வீதம் 30 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்.

இந்திய தண்டனை சட்டம் 342 (சட்டவிரோதமாக அடைத்துவைத்தல்) குற்றத்துக்காக தலா ஒரு ஆண்டு வீதம் 3 ஆண்டு சிறை தண்டனையும், 376 பிரிவின்படி(கற்பழிப்பு குற்றம்) தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 3 ஆயுள் தண்டனைக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்.

இந்திய தண்டனை சட்டம் 506(2) (கொலை மிரட்டல்) குற்றத்துக்காக 15 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். இந்த தண்டனைகளை எல்லாம் ஏககாலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும்.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Copyright © 2009 NewsToday360. All rights reserved.
[x]